முதலாவது உலகச் செம்மொழி இலக்கிய ஆய்வு கூட்டத்திற்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 7ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார்.
சீனாவும் கிரேக்கமும் இக்கூட்டத்தைக் கூட்டாக நடத்தின. ஏதென்சில் சீனாவின் செம்மொழி இலக்கிய நாகரிக ஆய்வகத்தை உருவாக்குவது என்பது இரு நாடுகள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளுக்கு இடையேயான நாகரிகப் பரிமாற்றத்திற்கு புதிய மேடையை வழங்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், நாகரிகத்தின் பரவல் மற்றும் வளர்ச்சியை சீனா ஆக்கப்பூர்வமாக விரைவுபடுத்தி வருகிறது. சர்வதேச மனிதப் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, உலக நாகரிக பேச்சுவார்த்தையை முன்னேற்ற சீனா பாடுபடும் என்றார்.
தொடர்புடைய தரப்புகளுடன் சேர்ந்து, உலக நாகரிக முன்மொழிவைச் செயல்படுத்தி, மனிதக்குலம் எதிர்நோக்கும் பல்வகை சவால்களைச் சமாளித்து, மனிதக் குலத்தின் நாகரிக வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தையும் கூட்டாகத் தூண்ட வேண்டும் என்னும் கருத்தையும் அவர் வலியுறுத்தி உள்ளார்.