30 ஆண்டுகளுக்குப் பிறகு சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்  

Estimated read time 0 min read

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற தில்லை கோவிந்தராஜ பெருமாள் திருக்கோயிலில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கட்கிழமை (நவம்பர் 3) அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
சைவ ஆலயமான நடராஜர் கோயிலுக்குள் வைணவத் தலமாக அமைந்திருக்கும் இந்தக் கோயில், ஒரே இடத்தில் சிவனையும் விஷ்ணுவையும் தரிசிக்கும் தனிச்சிறப்பைப் பெற்றதாகும்.
மேலும், இது 108 திவ்ய தேசங்களில் 41வது திவ்ய தேசமாகவும் திகழ்கிறது. கிழக்கு நோக்கிய இக்கோயிலில் புண்டரீகவள்ளி தாயார், ஆண்டாள் சன்னதி ஆகியவை அமைந்துள்ளன.
மூலவர் கோவிந்தராஜர் அனந்த சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த அக்டோபர் 30ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின.

Please follow and like us:

You May Also Like

More From Author