சாவ் பாலோ நகரில் சி.எம்.ஜியின் சிறப்பு தொலைகாட்சி நிகழ்ச்சி ஒளிப்பரப்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ரியோ டி ஜெனிரோ நகருக்குச் சென்று, ஜி 20 நாடுகளின் தலைவர்களுக்கான 19ஆவது உச்சிமாநாட்டில் பங்கெடுத்து, அந்நாட்டில் அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார்.

சீன ஊடகக் குழுமத்தின் சிறப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி அந்நாட்டில் ஒளிப்பரப்பு நடவடிக்கை சாவ் பாலோ நகரில் தொடங்கியுள்ளது. சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென் ஹைய்சியோங் காணொளி வழியாக உரைநிகழ்த்தினார்.

அவர் கூறுகையில்,

இவ்வாண்டு, சீன-பிரேசில் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவாகும். இரு நாட்டுத் தலைவர்களின் வழிக்காட்டலில், புதிய யுகத்தில் இரு நாட்டுறவு தொடர்ந்து மேம்பட்டு வருகிறது.

சி.எம்.ஜி மற்றும் பிரேசில் செய்திஊடகங்கள் இந்நடவடிக்கையைக் கூட்டாக நடத்தின. இது, இரு நாட்டு மனிதப் பரிமாற்றம் மற்றும் சீன-பிரேசில் நட்பார்ந்த மக்களின் விருப்பத்தை வலுப்படுத்துவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையாக இருக்கும் என்றார்.

You May Also Like

More From Author