டிரம்ப் அரசு சர்வதேச அவசரப் பொருளாதார அதிகாரச் சட்டத்தின்படி பன்னாடுகளின் மீது விதித்துள்ள கூடுதல் வரிக் கொள்கைக்குத் தடை விதிக்கும் தீர்ப்பைத் தற்காலிகமாகத் தள்ளிப்போடுவதாக அமெரிக்க பெடரல் சுற்று மேல்முறையீட்டு நீதிமன்றம் 29ஆம் நாள் தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பு அளிக்கப்படுவதற்கு முன்னதாக, தனது வரிக் கொள்கையின் மீதான தடையை உடனடியாக நிறுத்தாவிடில், உச்ச நீதிமன்றத்தை நாடி அவசர உதவியைக் கேட்கப்போவதாக டிரம்பு அரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தது.
இந்தத் தீர்ப்புக்கு ஒரு நாள் முன்னதாக டிரம்ப் அரசு ஏப்ரல் 2ஆம் நாளன்று அறிவித்த பிளான்ட் சுங்க வரி கொள்கையைத் தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதி மன்றம் ஏப்ரல் 28 ஆம் நாளன்று தீர்ப்பளித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
இத்தீர்ப்பில் சுமார் அனைத்து வர்த்தகக் கூட்டாளிகள் மீது பன்முக சுங்க வரி வசூலிக்கும் அதிகாரம் அமெரிக்க அரசுத் தலைவருக்குக் கிடையாது என்றும், அமெரிக்க நாடாளுமன்றம் சுங்க வரி வசூலிக்கும் கட்டுப்பாடு இல்லாத அதிகாரத்தை அரசுத் தலைவருக்கு வழங்கியது அரசியல் அமைப்புச் சட்டத்திற்குப் புறும்பானது என்றும் கூறப்பட்டிருந்தது.
முன்னதாக ஏப்ரல் 23ஆம் நாளன்று, அரிசோனா, கொலராடோ, கனெக்டிகட் உள்ளிட்ட அமெரிக்காவின் 12 மாநிலங்கள், கூட்டணி ஒன்றை உருவாக்கி, டிரம்ப் அரசு மீது வழக்குகளைத் தொடுத்தன. டிரம்ப் அரசின் சுங்க வரி கொள்கை, சட்டத்தை மீறிய ஒன்று என்பது அவர்களின் வாதமாகும்.