நவம்பர் 18ஆம் நாள் பிற்பகல், சீன தலைமையமைச்சர் லீச்சியாங், மாஸ்கோவில் அமைந்துள்ள கிரெம்ளின் மாளிகையில், ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினுடன் சந்தித்துரையாடினார்.
அப்போது லீச்சியாங் கூறுகையில்,
ரஷியாவுடன் தலைமுறை நட்புறவை ஆழமாக்கி, பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளை மேம்படுத்தி, இரு நாடுகளின் வளர்ச்சி மற்றும் மறுமலர்ச்சிக்கு மேலும் சீராக சேவை புரிய வேண்டும் என்றார்.
புதின் கூறுகையில்,
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் வலிமையான தலைமையில், 15வது ஐந்தாண்டுத் திட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள வளர்ச்சி இலக்குகளை சீனா தடையின்றி நிறைவேற்றி, மேலதிகமான பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் வளர்ச்சிச் சாதனைகளைப் பெறலாம் என்றார்.
