நவம்பர் மாதத்தின் இறுதி வரை, சீனாவில் 5ஜி அடிப்படை நிலையங்களின் மொத்த எண்ணிக்கை 48லட்சத்து 30ஆயிரத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இறுதியை விட, 5லட்சத்து 79ஆயிரம் அதிகரித்துள்ளது.
மேலும் புள்ளிவிவரங்களின்படி, நவம்பர் இறுதி வரை சீனாவில் 3 முக்கிய தொலைதொடர்பு நிறுவனங்களின்
நிலையான பிராட்பேண்ட் இணையப் பயனர்களின் எண்ணிக்கை 69.7கோடியைத் தாண்டியுள்ளது. ஐ.பி.டி.வி. மற்றும் ஓ.டி.டி. (IPTV、OTT)பயனர்களின் எண்ணிக்கை 41.5கோடியை எட்டியுள்ளது.
5ஜி பயனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. நவம்பர் இறுதி வரை, 3 முக்கிய தொலைதொடர்பு நிறுவனங்கள் மற்றும் சீன ஒலிபரப்பு மற்றும் இணைய நிறுவனத்தின் செல்லிடத்தொலைபேசி பயனர்களின் மொத்த எண்ணிக்கை 182.8கோடியைத் தாண்டியுள்ளது. இதில் 5ஜி பயனர்களின் எண்ணிக்கை 119.3கோடியை எட்டி செல்லிடத்தொலைபேசி பயனர்களிடையில் 65.3விழுக்காட்டை வகித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
