அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இ -மெயில் முகவரியை உருவாக்க, வகுப்பு ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த இ – மெயில் முகவரியை, பள்ளிக்கல்வியின் எமிஸ் மாணவர் விபரங்களுடன் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 10 முதல் டிசம்பர் 31க்குள் துவக்க வேண்டும், பயன்படுத்துவது, குறித்து ஆசிரியர்கள் அவர்களுக்கு கற்பிக்க மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.