மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2026ஆம் ஆண்டு முதல் இரண்டாம் தேர்வு பொதுத்தேர்வை அறிமுகப்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த திட்டம் பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின் (NCFSE) பரிந்துரைகளுடன் ஒத்துப்போகிறது.
தற்போது, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்கள், ஆண்டுதோறும் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் தங்கள் பொதுத்தேர்வை எழுதுகிறார்கள், முடிவுகள் மே மாதத்தில் அறிவிக்கப்படுகின்றன.