வசந்த விழாவை, ஐ.நாவின் விடுமுறையாக நிர்ணயிக்கும் தீர்மானத்தை 78வது ஐ.நா பேரவை டிசம்பர் 22ம் நாள், நிறைவேற்றியுள்ளது.
ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதிக் குழுவின் தற்காலிகத் தூதர் டை பிங் இதற்குப் பிறகு கூறுகையில், வசந்த விழாவை, ஐ.நாவின் விடுமுறையாக மாறுவதை முன்னெடுப்பது, உலகின் நாகரிக முன்மொழிவைச் செயல்படுத்தி, பல்வகை பண்பாடுகளுக்கு மதிப்பளிக்கும் செயலாகும்.
இதன் மூலம், உலகளவில் பல்வகை நாகரிகங்களின் பரிமாற்ற அதிகரிப்புடன், ஐ.நா முன்மொழிந்த பன்முகத் தன்மை மற்றும் அனைத்து பண்பாடுகளையும் உள்ளடங்கிய தன்மை வெளிக்காட்டப்படுகிறது. இத்தீர்மானம், ஐ.நாவின் உறுப்பு நாடுகள் மற்றும் பொதுச் செயலகப் பணியாளர்களின் பாராட்டுகளையும் ஆதரவையும் பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.
தற்போது வசந்த விழா, பல நாடுகள் மற்றும் பிரதேசங்களில் சட்டப்பூர்வமான விழாவாகக் கொண்டாடப்படுகிறது. உலகில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதி மக்கள் இவ்விழாவைக் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.