78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) அன்று புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றினார்.
இதன் மூலம், முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்திக்கு பிறகு தொடர்ச்சியாக 11 முறை டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிய பெருமையை மோடி பெற்றுள்ளார்.
ஒட்டுமொத்தமாக ஜவஹர்லால் நேரு 17 முறையும், இந்திரா காந்தி 16 முறையும் செங்கோட்டையில் கொடியேற்றியுள்ளனர். இவர்களுக்கு அடுத்த இடத்தில் மோடி உள்ளார்.
இந்த பட்டியலில் 10 முறை கொடியேற்றிய மன்மோகன் சிங் மோடிக்கு அடுத்து நான்காவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, கொடியேற்றிய பிறகு நாட்டு மக்களுக்கு செங்கோட்டையில் இருந்து மோடி உரையாற்றி வருகிறார்.