மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக்கிங் செய்யப்பட்டதாக சர்ச்சை 

மும்பை வடமேற்கு மக்களவை தொகுதி தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தைரியம் இல்லை என்று சிவசேனா(யுபிடி) தலைவர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.
ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது அந்த வாக்கு எண்ணும் மையத்தில் வெற்றி பெற்ற வேட்பாளரின் உறவினர் மொபைல் போனை பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின.
அந்த தொகுதியில் வெற்றி பெட்ரா ரவீந்திர வைகரின் மைத்துனர் மங்கேஷ் பாண்டில்கர், வாக்குகள் எண்ணப்படும் போது, ​​மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை திறக்க மொபைல் போனை பயன்படுத்தியதாக ஊடக அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஆனால், தேர்தல் அதிகாரி வந்தனா சூர்யவன்ஷி மற்றும் மும்பை போலீசார் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author