மெக்சிகோ சிட்டி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற மதிப்புமிக்க போட்டியின் 73வது பதிப்பில் டென்மார்க்கைச் சேர்ந்த விக்டோரியா கேர் தேல்விக் 2024ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி பட்டம் வென்றார்.
உலகம் முழுவதிலுமிருந்து 120க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட பிரமாண்ட நிகழ்வில் வெற்றி பெற்ற முதல் டேனிஷ் பெண்மணி தேல்விக் ஆவார்.
இந்த பிரபஞ்ச அழகி போட்டியில், மிஸ் நைஜீரியா சிதிம்மா அடெட்ஷினா முதல் ரன்னர் அப் ஆகவும், மெக்சிகோ அழகி மரியா பெர்னாண்டா பெல்ட்ரான் இரண்டாவது ரன்னர்-அப் இடத்தையும் பெற்றனர்.
இந்தியாவின் ரியா சிங்காவும் முதல் 30 போட்டியாளர்களுக்குள் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.