சீன-பிரேசில் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜி 20 அமைப்பின் 19ஆவது உச்சிமாநாட்டில் பங்கெடுத்து, பிரேசிலில் அரசு முறை பயணம் மேற்கொண்டதை முன்னிட்டு, நவம்பர் 20ஆம் நாள், சீன-பிரேசில் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவுக்கான மனித பண்பாட்டுப் பரிமாற்ற நடவடிக்கைகளை, சி.எம்.ஜி மற்றும் பிரேசில் தேசிய ஊடக நிறுவனம் அந்நாட்டின் தலைநகரில் கூட்டாக நடத்தின. பிரேசில் அரசுத் தலைவர் லூலா இதற்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.
அவர் கூறுகையில்,
இந்நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தன. இரு நாடுகளுக்கிடையில் நீண்டகால வரலாறுடைய பண்பாட்டுஉறவை இவை வலுப்படுத்தும் என்றார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹைய்சியோங் இந்நடவடிக்கையில் உரைநிகழ்த்தினார்.
அவர் கூறுகையில்,
சர்வதேச முன்னணியிலுள்ள முக்கிய ஊடகக் குழுமமான சி.எம்.ஜி, இரு நாடுகளின் பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் மக்களின் தொடர்பை வலுப்படுத்துவதற்கு பாடுபட்டு வருகிறது. பிரேசிலின் பல்வேறு துறையின் நண்பர்களுடன் இணைந்து, சீன-பிரேசில் மனிதப் பரிமாற்றத்தை தொடர்ந்து ஆழமாக்கி, சீன-பிரேசில் நெடுநோக்குக் கூட்டாளியுறவை புதிய உயரத்தைக் கூட்டாக எட்ட பாடுபட வேண்டும். இரு நாட்டுறவுகளும் அடுத்த பொற்கால யுகதத்தில் நுழைய பாடுபட வேண்டும் என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author