நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த 48 மணி நேரத்தில் 29 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
வேதாரண்யம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையில் வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் உள்ள மாணவர் தங்கும் விடுதியை சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது.
மேலும், குடியிருப்புக்களுக்கு செல்லும் தார் சாலை முழுவதும் சுமார் 2 அடி மழை நீர் தேங்கி உள்ளது. வீடுகள் சுற்றியும் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் தண்ணீரிலேயே நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கனமழையால் வேதாரண்யம் பகுதியில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள 5 ஆயிரம் ஹெக்டர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.