ராமேஸ்வரத்தில் நாளை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சென்னையில் கேலோ விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைக்க வருகை தருகிறார். இதனையடுத்து திருச்சிக்கு செல்லும் அவர் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

திருச்சியிலிருந்து மதுரைக்கு செல்லும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார். நாளை பிற்பகல் ராமேஸ்வரம் செல்லும் மோடி அங்கு சாமிதரிசனம் செய்துவிட்டு கோவில் வளாகத்தை சுத்தம் செய்கிறார்.

ஜனவரி 21ஆம் தேதி கடலில் நீராடிவிட்டு பின்னர் கடலில் புனித தீர்த்தங்களைச் சேகரிக்கும் அவர், புனிதநீர் கலசங்களுடன் டெல்லி புறப்படுகிறார்.

இந்நிலையில் பிரதமர் வருகையையொட்டி போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author