சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 33 விமான சேவைகள் ரத்து

Estimated read time 1 min read

இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து மத்திய கிழக்குப் பகுதிகளுக்கு இயக்கப்படும், விமான சேவைகள் 2வது நாளாக, இன்றும் பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் ஈரான் நாட்டின் நிலைகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அங்கு கடுமையான போர் மூண்டிருக்கிறது. ஈரான் மீதான தாக்குதல் அந்த நாட்டில் மட்டுமின்றி அருகிலுள்ள வளைகுடா நாடுகளுக்கும் பரவி வருவதால் அங்கு வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், கத்தார், பஹ்ரைன், குவைத், துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் எதிர்த்தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பும் அடுத்தடுத்து பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்த தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பதால் நிலைமை மேலும் மோசமடையக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஐக்கிய அரபு அமிரகத்தில் 40 லட்சம் பேர், சவுதி அரேபியாவில் 28 லட்சம் பேர் உள்பட வளைகுடா நாடுகளில் ஒரு கோடி இந்தியர்கள் வாழ்வதாகக் கூறப்படுகிறது. வளைகுடா நாடுகளில் கணிசமான எண்ணிக்கையில் தமிழர்களும் உள்ளனர். ஈரான் – அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போரால் வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானப் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டிருப்பதால் இந்தியர்களை மீட்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து மத்திய கிழக்குப் பகுதிகளுக்கு இயக்கப்படும், விமான சேவைகள் 2வது நாளாக, இன்றும் பாதிக்கப்பட்டுள்ளது.. துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்ல வேண்டிய 17 விமானங்கள், இந்த நாடுகளில் இருந்து, சென்னைக்கு வரவேண்டிய 16 விமானங்கள் என மொத்தம் 33 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author