விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்ற 3-ஆம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
விஜய கரிசல்குளத்தில் 16 குழிகள் தோண்டப்பட்டு 3ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெறும் சூழலில், இதுவரை 2 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், புதிதாக தோண்டப்பட்ட குழியில் நீல நிற கண்ணாடி மணி, சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து பேசிய அகவாழ்வு இயக்குனர் பாஸ்கர், முன்னோர்கள், அணிகலன்களுக்கும், கலைக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது இதன்மூலம் புலப்படுவதாக தெரிவித்தார்.