மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; ஸ்மிருதி மந்தனா சாதனை  

Estimated read time 0 min read

இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஒரு காலண்டர் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நான்கு சதங்களை அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டியின்போது அவர் 103 பந்துகளில் தனது சதத்தை அடித்தார்.
இது ஒரு வருடத்தில் மூன்று சதங்கள் என்ற அதிகாட்ச முந்தைய மகளிர் கிரிக்கெட் சாதனையை முறியடித்தது. இந்த சாதனையை பல வீரர்கள் கூட்டாக வைத்திருந்தனர்.

ஸ்மிருதி மந்தனா 14 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 96.33 சராசரியை 109 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தாலும், 299 ரன்களைத் துரத்திய இந்தியா 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Please follow and like us:

You May Also Like

More From Author