தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்க்கிறது. நேற்று முதல் மழை பரவலாக பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. சென்னையிலும் நேற்று முதல் பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தொடர் மாலை காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி சத்தியமூர்த்தி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கிறது.
இதனால் பாதுகாப்பு கருதி பூண்டி ஏரியிலிருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.