இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சிஇ20 கிரையோஜெனிக் என்ஜினின் வெற்றிகரமான கடல் மட்ட வெப்பச் சோதனை மூலம் அதன் விண்வெளித் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக வியாழக்கிழமை (டிசம்பர் 12) அறிவித்துள்ளது.
இந்த சோதனை நவம்பர் 29, 2024 அன்று தமிழ்நாட்டின் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை வளாகத்தில் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சோதனை என்ஜினின் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதில் ஒரு முக்கியமான படியாகும்.
சந்திரயான்-2, சந்திரயான்-3 மற்றும் வரவிருக்கும் ககன்யான் மனித விண்வெளிப் பயணத் திட்டத்தில் முக்கியப் பங்காற்றும் இஸ்ரோவின் எல்விஎம்3 ஏவுகணை வாகனத்தின் மேல்நிலைக்கு சிஇ20 இன்ஜின் சக்தி அளிக்கிறது.