சீனப் பொருளாதார வளர்ச்சி பற்றிய உலகளாவிய கருத்து கணிப்பு

சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் அண்மையில், சீனப் பொருளாதார வளர்ச்சி பற்றி, உலகளாவிய இணையப் பயனாளர்களிடம் கருத்து கணிப்பு நடத்தியது. இதில் பங்கெடுத்த 92.4 விழுக்காட்டினர் சீனப் பொருளாதார வளர்ச்சியின் மீது நம்பிக்கை கொள்கின்றனர். சீனப் பொருளாதாரம், பொருளாதார அதிகரிப்புக்கான இயக்காற்றலாகப் பங்காற்றி, உலகப் பொருளாதாரத்துக்கு மேலதிக உறுதித்தன்மை மற்றும் வாய்ப்புகளை வழங்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், சீனப் பொருளாதார அதிகரிப்பு விகிதம் 4.8 விழுக்காடாகும். புதிதாக அமைக்கப்பட்ட அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. மேலும், நுகர்வு அதிகரிப்பு விகிதம் மீட்சி அடைந்து, சரக்கு வர்த்தகம் வேகமாக அதிகரித்து வருகிறது. இது குறித்து, 90.7 விழுக்காட்டினர் சீனப் பொருளாதாரத்தின் உள்ளார்ந்த ஆற்றல் மற்றும் உறுதித்தன்மையைப் பாராட்டினர். மேலும், உலகப் பொருளாதாரத்தின் மீட்சிக்கு, சீனப் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சி தேவைப்படுகிறது என்று 89.4 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.
இவ்வாண்டு, சீனாவின் விசா இல்லா கொள்கை, சீன-வெளிநாட்டு மக்களின் பரிமாற்ற வசதி வழங்கியதோடு, புதிய வர்த்தக வாய்ப்புகளின் உருவாக்கத்துக்குத் துணைப் புரிந்தது. 93.2 விழுக்காட்டினர் இதைப் பாராட்டினர். உயர்நிலை வெளிநாட்டுத் திறப்பில் சீனா ஊன்றி நிற்பதற்கான நம்பிக்கையை இது வெளிப்படுத்தியுள்ளது என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்தக் கருத்து கணிப்பு, ஆங்கிலம், ஸ்பெனிஷ், பிரெஞ்சு, அரபு ஆகிய 5 மொழிகளில் எடுக்கப்பட்டது. 24 மணி நேரத்துக்குள் 5142 பேர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.

You May Also Like

More From Author