சீன-இத்தாலி பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவு உருவாக்கப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இத்தாலி அரசுத் தலைவர் செர்ஜியோ மேட்டரெல்லா சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்தார்.
அவர் கூறுகையில், கடந்த 70-75 ஆண்டுகளில், அறிவியல் ஆய்வு, சமூக வளர்ச்சி, பொது மக்களின் நலன் உள்ளிட்ட துறைகளில், இரு நாடுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற்றுள்ளன. சந்தையின் திறப்பு மற்றும் இயல்பான சர்வதேச ஒழுங்கிற்கு இரு நாடுகள் ஆதரவளிப்பதோடு, பாதுகாப்புவாதம், திறப்பு தன்மையின்மை மற்றும் எதிரெதிர் நிலையை எதிர்க்கின்றன. சந்தையின் திறப்பு மற்றும் வர்த்தகத் தொடர்பு, பரஸ்பர நலன் தரும் வெற்றியை வழங்கும். இது, எதிரெதிர் நிலை மற்றும் போர்களை நீக்கும் அதேவேளையில், பொது மக்களின் நலன்களை அதிகரிக்கும் என்றார்.
மேலும், எதிர்காலத்தில், பண்பாடு, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், விண்வெளி உள்ளிட்ட துறைகளில், சீனாவுடன் நெருங்கிய ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, உலக அமைதி மற்றும் நிலைத்தன்மையை முன்னேற்றுவதற்குப் பங்காற்ற இத்தாலி விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
சீன ஊடகக் குழுமத்துக்கு இத்தாலி அரசுத் தலைவர் சிறப்புப் பேட்டி
