சீன இராணுவப் படை 17ஆம் நாள், தைவான் நீரிணைப் பகுதியில் இராணுவ பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மௌநீங் 17ஆம் நாள் இது பற்றி செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அவர் கூறுகையில்,
சீனப் பெருநிலப் பகுதியின் தொடர்புடைய இராணுவ நடவடிக்கை, நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் உரிமைப் பிரதேச ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்குத் தேவையான, சட்டப்பூர்வமான, நியாயமான நடவடிக்கையாகும்.
தைவான் சுதந்திர சக்திகளுக்கு வெளிபுற சக்திகள் ஆதரவளிப்பதற்கு சீனா உறுதியாக எதிர்க்கின்றது. தைவான் சுதந்திர சக்திகளின் தவறான நடவடிக்கைகளுக்கு இந்த இராணுவப் பயிற்சி ஒரு கடும் எச்சரிக்கையாகும் என்றார்.