2025ம் ஆண்டு இரு கூட்டத் தொடர் நடைபெறும் நாள் முடிவு

 

14வது சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் 13வது கூட்டம் டிசம்பர் 25ம் நாள் காலை நடைபெற்றது.

இதில், 14வது சீன தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டம் நடத்துவதற்கான தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இம்முடிவின்படி 2025ம் ஆண்டு மார்ச் 5ம் நாள் பெய்ஜிங்கில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டியின் 3வது கூட்டம் நடத்துவதற்கான முடிவின் வரைவு, அண்மையில் நடைபெற்ற சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டியின் 29வது தலைவர் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதில் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டியின் 3வது கூட்டம், 2025ம் ஆண்டின் மார்ச் 4ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெறுவதற்கான ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.

 

You May Also Like

More From Author