தைவான் நீரிணை இரு கரைகளின் நிதான அடிப்படை:1992 என்ற பொது கருத்து

சீன அரசவை தைவான் விவகாரப் பணியகம் டிசம்பர் 25ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. இப்பணியகத்தின் செய்தித்தொடர்பாளர் சென் பின் ஹுவா கூறுகையில்,

தைவான் நீரிணை இரு கரைகளின் உறவு தன்மையை 1992 என்ற பொது கருத்து தெளிவாக வரையறுக்கிறது. தைவான் நீரிணை இரு கரைகளின் உறவு வளர்ச்சியின் அரசியல் அடிப்படையாகவும் தைவான் நீரிணை அமைதி மற்றும் நிதானத்தின் முக்கிய அம்சமாகவும் இது திகழ்கின்றது.

1992 என்ற பொது கருத்தை அங்கீகரித்து ஒரே சீனா என்ற கோட்பாட்டைக் கடைப்பிடித்தால், இரு கரைகளின் உறவு மேம்பட்டு வளர்ச்சி அடையும். தைவான் சக நாட்டவர் பயனடையலாம் என்றார்.

1992 என்ற பொது கருத்தை மறுத்து, ஒரே சீனா என்ற கோட்பாட்டிலிருந்து விலகினால், இரு கரைகளின் உறவு பதற்றமாகவும் கொந்தளிப்பாகவும் இருக்கும். தைவான் சக நாட்டவர்களின் நலன் பாதிக்கப்படும். இரு கரைகளின் உறவு வரலாறு பலமுறையில் இதை நிரூபித்துள்ளது.

தைவான் பிரதேசத்தின் பல்வேறு தரப்புகள் எங்களுடன் இணைந்து, சீன நாட்டின் மாபெரும் மறுமலர்ச்சி அடையக் கூட்டாகப் பாடுபட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author