ஜெர்மன் தலைமை அமைச்சர் சமீபத்தில் மேற்கொண்ட சீனப் பயணம் அதிக சாதனைகளைப் பெற்றுள்ளது.
அவரது 2 நாட்கள் பயணத்துக்குப் பிறகு, சீனா மீது ஜெர்மன் தொழில் நிறுவனங்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. சீனாவுடன் ஒத்துழைக்கும் விருப்பத்தை அவை வெளிக்காட்டியதோடு, சீனாவின் புத்தாக்கத்திலும் பெரும் கவனம் செலுத்தியுள்ளன.
சீனா-ஜெர்மனி வணிக சங்கத்தின் வடக்கு மற்றும் வட கிழக்கு பகுதியின் செயல் இயக்குநர் ஓலிவெர் கூறுகையில், ஜெர்மன் தலைமை அமைச்சருடன் சீனாவில் பயணம் மேற்கொண்ட வணிக பிரதிநிதிக் குழுவின் அளவு, அதன் உறுப்பினர்களின் நிலை மற்றும் தொழில் வகைகள் ஆகியவை, ஜெர்மன்-சீன வணிக சூழல் அமைப்புக்கு நேர்மறையான சமிக்கையை அனுப்பியுள்ளது என்று தெரிவித்தார்.
உரையாடல், ஒத்துழைப்பு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் கூட்டு வெற்றிக்கான வலுவான சமிக்கையை இப்பயணம் வழங்கியுள்ளது என்று BMW குழுமத்தின் தலைவர் ஸீப்செ கூறினார். மேலும், உலகளவில் மிகப்பெரிய வாகனச் சந்தையாக விளங்கும் சீனா, எங்கள் தொழிலுக்கு முக்கிய தொழில்நுட்ப புத்தாக்க சக்திகளில் ஒன்றாகவும் திகழ்கிறது என்றும் குறிப்பிட்டார்.
ஜெர்மன் தொழில் நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்யும் வேகம் அதிகரித்து வருகிறது. பீயர்ஸ்டார்ஃப் குழுமம் 2025ஆம் ஆண்டில் நிவியா ஷாங்காய் நிறுவனத்தில் 3 கோடி டாலருக்கும் மேற்பட்ட முதலீடு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
