டிசம்பர் 24ஆம் நாள் சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த 2025ஆம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள நான்கு கிளை இடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சொங்சிங் நகர், ஹூபே மாநிலத்தில் உள்ள வுஹான் நகர், சீசாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் லாசா நகர், ஜியாங்சு மாநிலத்தில் உள்ள வூஸி நகர் ஆகிய நான்கு கிளை இடங்களில் தனிச்சிறப்பு மிக்க அரங்குகள் அமைக்கப்பட்டன.
இவை பெய்ஜிங்கிலுள்ள முக்கிய அரங்கத்துடன் இணைந்து, நாடு முழுவதும் உள்ள பல்வேறு இன மக்களுடன் வசந்த விழா கொண்டாட்டத்தை வழங்க உள்ளன.
புத்தாண்டு தினத்தன்று இரவு உலகளாவிய பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் சிறந்த “பண்பாட்டு புத்தாண்டு இரவு விருந்தாக” இந்நிகழ்ச்சி திகழும்.