உக்ரேன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சீனா முயற்சி

ஐ.நாவுக்கான சீன நிரந்தரத் தூதரகத்தின் ஆலோசகர் டேங்ஃபி 24ஆம் நாள், ஐ.நா பொது பேரவையின் அவசர வாக்கெடுப்புக்குப் பின் உரை நிகழ்த்தினார். உக்ரேனின் நீண்டகால அமைதிக்கு ஆதரவு எனும் வரைவு தீர்மானம் பற்றி அவர் கூறுகையில்,

தற்போதைய முக்கிய காலக்கட்டத்தில், சர்வதேச சமூகம் உக்ரேன் நெருக்கடியை அரசியல் ரீதியில் தீர்ப்பதற்கு தேவையான சூழலை உருவாக்க சீனா எதிர்ப்பார்க்கின்றது என்று தெரிவித்தார். நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஆக்கப்பூர்வ முயற்சிகளை சீனா தொடர்ச்சியாக மேற்கொள்ளும் என்றார்.

ஐ.நா பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 107 ஆதரவாகவும் 12 எதிராகவும் பெற்றதை ஏற்றுக் கொள்ளப்பட்டன. தவிரவும், 51 வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை. இதன் விளைவாக, உக்ரேனின் நீண்டகால அமைதிக்கு ஆதரவு எனும் தீர்மானம் இதில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

You May Also Like

More From Author