யுனெஸ்கோவின் பொது இயக்குநருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு

Estimated read time 0 min read

சீன அரசு தலைவர் ஷி ச்சின்பிங் மே 12ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் யுனெஸ்கோ பொது இயக்குநர் எனானியுடன் சந்திப்பு நடத்தினார்.

ஷி ச்சின்பிங் கூறுகையில், அனைத்து நாடுகளின் மக்களிடையே பரஸ்பர புரிதலையும் நம்பிக்கையையும் மேம்படுத்துவதற்கும், பல்வேறு நாகரிகங்களிடையே பரிமாற்றங்களை ஊக்குவிப்பதற்கும் யுனெஸ்கோ முக்கியப் பங்களிப்புகளை அளித்துள்ளது என்றார். அனைத்து நாடுகளின் மக்களுக்கும் மேலும் நன்றாக நன்மை புரிவதற்கும் வகையில், யுனெஸ்கோவுடனான உத்திநோக்கு ஒத்துழைப்பை ஆழப்படுத்த சீனா விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், சீனா எப்போதும் உண்மையான பலதரப்புவாதத்தை உறுதியாக செயல்படுத்தி, ஐ.நாவின் அதிகாரத்தை ஆதரித்து பராமரித்து, உலகளாவிய நிர்வாகத்தில் யுனெஸ்கோவின் முக்கியப் பங்கை ஆதரித்து வருகிறது என்று அவர் வலியுறுத்தினார். நான்கு உலகளாவிய முன்முயற்சிகளைச் செயல்படுத்தவும், மனிதகுல பொது எதிர்கால சமூகத்தின் கூட்டு கட்டுமானத்தை ஊக்குவிக்கவும் யுனெஸ்கோவுடன் இணைந்து பணியாற்ற சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author