குஜராத்தின் பருச் மாவட்டத்தில் உள்ள தஹேஜ் என்ற இடத்தில் உள்ள ஒரு ரசாயன ஆலையில் தொழிலாளர்கள் பணியில் இருந்த போது திடீரென விஷ வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.
உற்பத்தி பகுதியில் இருந்து வெளியான இந்த வாயுக் கசிவை சுவாசித்த தொழிலாளர்கள் சிலர் மயக்கம் அடைந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழு மயங்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.
இந்நிலையில் விஷ வாயுவை சுவாசித்த நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.