தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 10ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதேபோல் தமிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 10ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் வருகிற 10ம் தேதி நடைபெற உள்ளது. வருகிற 10ம் தேதி காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.