சீனாவின் குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நான்னின் நகரில் உலகளாவிய நகராட்சித் தலைவர்களின் பேச்சுவார்த்தை 16ஆம் தேதி தொடங்கியது.
இதில் சீனா, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியன்மார், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 8 நாடுகளின் நகராட்சித் தலைவர்கள், நகராட்சித் தலைவர்களின் பிரதிநிதிகள், நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கெடுத்தனர்.
அப்போது, தாய்லாந்து சூரத் தானி Surat Thani மாநிலத்தின் துணை தலைவர் Bundan Sathirachawal கூறும்போது, இரு தரப்புகளின் ஒத்துழைப்புகளை, குறிப்பாக, சுற்றுலா துறையின் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த விரும்புகின்றேன். நான்னின் நகருடன் மேலதிகமான பரிமாற்றங்களை வலுப்படுத்த தாய்லாந்து தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் இப்பேச்சுவார்த்தையில், நான்னின் முன்மொழிவு வெளியிடப்பட்டது. பல்வேறு தரப்புகளுடன் ஆழமான முறையில் பயனுள்ள ஒத்துழைப்புகளை விரைவுபடுத்தி, நெருக்கமான சீன-ஆசியான் பொது சமூகத்தைக் கட்டியமைத்து, உலகின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்ற வேண்டும் என்பது இந்த முன்மொழிவின் நோக்கம் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் குவாங்சி பிரதேசத்தின் நிரந்தர பிரதிநிதியும், நான்னின் நகராட்சிக் கட்சிக் குழு செயலாளருமான நொங்செங்வென் தெரிவித்தார்.
நான்னினில் உலகளாவிய நகராட்சித் தலைவர்களின் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இப்பேச்சுவார்த்தையில் நான்னின் முன்மொழிவு வெளியிடப்பட்டது.