60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாததை நாங்கள் 10 ஆண்டுகளில் செய்தோம்! – பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சியால் வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரச்சினைகளை மட்டுமே கொடுக்க முடிந்தது எனப் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

மக்களவைத் தேர்தலையொட்டி  அசாம் மாநிலம் நல்பாரியில் நடைபெற்ற பிரம்மாண்ட பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி,

நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்கு தகுதியான வசதிகளை வழங்க தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டப்படும். பாகுபாடின்றி இவை கிடைக்கும்.

70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்துள்ளேன்.

இன்று நாடு முழுவதும் பிரதமர் மோடியின் உத்தரவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்துக்கு வடகிழக்கு மாநிலங்களே சாட்சியாக உள்ளன.

காங்கிரஸ் கட்சியால் வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரச்சினைகளை மட்டுமே கொடுக்க முடிந்தது. அங்கு காங்கிரஸ் பிரிவினைவாதத்தை தூண்டியது. அமைதி மற்றும் பாதுகாப்புக்கான முயற்சிகளை பாஜக மேற்கொண்டது.

60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாததை நாங்கள் 10 ஆண்டுகளில் செய்தோம். எல்லோருக்கும் எல்லாம் என்ற மந்திரத்தை பின்பற்றும் கட்சிதான் பாஜக.

2014-ல் நம்பிக்கையையும், 2019-ல் உறுதியான உணர்வையும் கொண்டு வந்தேன். 2024-ம் ஆண்டு உத்தரவாதத்தை கொண்டு வருகிறேன். இது மோடியின் உத்தரவாதம் எனத் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author