ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது வாக்குப்பதிவு தொடங்கப்பட்டு விட்டது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிகளில் மக்கள் வரிசையாக நின்று வாக்களித்து வருகிறார்கள். முன்னதாக சட்டசபை தேர்தலின் போது ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவரு உடல் நல குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதிக்கு சட்டசபை தேர்தல் வந்தது. அந்த தொகுதியில் அவருடைய தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி நிலையில் இவர் கடந்த வருடம் உடல் நலக்குறைவினால் இறந்துவிட்டார்.
இதனால் அந்த தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் வந்துள்ளது. இந்த தேர்தலில் திமுக கட்சியின் சார்பில் விசி சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதாலட்சுமியும் சுயேச்சை வேட்பாளர்களும் களம் காண்கின்றனர். மேலும் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே தேர்தலில் நேரடி போட்டி என்பது உருவாகியுள்ள நிலையில் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.