தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்பவர் செல்வராகவன் அழுத்தமான திரைக்கதையாக பெயர்பெற்றவர்.
அவரின் பல படைப்புகள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதில் ஒரு முக்கியமான காதல் படமாக கருதப்படுவது 7G ரெயின்போ காலனி.
இப்படம் மட்டுமின்றி அதன் பாடல்களும் மிகப்பெரிய ஹிட். படத்திற்கு இசையமைத்ததிருந்தது யுவன் ஷங்கர் ராஜா.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தில் நடித்திருந்த ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வாலின் பேட்டி வைரலானது.
இதன் தொடர்ச்சியாக பலரும் 7G ரெயின்போ காலனியின் இரண்டாம் பாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.