டெல்லி ஆம் ஆத்மி அரசை விமர்சித்த பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி இன்று அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி ஆளும் ஆம் ஆத்மி அரசை கடுமையாக விமர்சித்தார். பிதமர் மோடி பேசும் போது, வளர்ச்சியைப் பற்றி பேசி ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி ஊழலில் ஈடுபட்டு வருகிறது. டெல்லி மக்கள் ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்து தங்களை விடுவிக்க முடிவு செய்துவிட்டனர் என கூறினார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் கருத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ஒழுங்காக வேலை செய்வோர் குறை சொல்ல மாட்டார்கள். குறை சொல்வோர் வேலை செய்ய மாட்டார்கள். ஏதாவது வேலை செய்திருந்தால் டெல்லி மக்களை பிரதமர் குறை சொல்லியிருக்க மாட்டார். கடந்த 10 ஆண்டுகளாக டெல்லிக்கு எந்தவித உதவிகளையும் பிரதமர் செய்யவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் ஆம் ஆத்மி செய்த சாதனைகளை சொல்ல பல மணி நேரம் ஆகும். கல்வி, சுகாதாரம், குடிநீர், சாலை என ஏராளமான வேலைகளை ஆம் ஆத்மி அரசு செய்துள்ளது என கூறினார்.