கடந்த ஆண்டின் டிசம்பர் இறுதி வரை, சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு தொகை 320240கோடி அமெரிக்க டாலரை எட்டியது என்று சீனத் தேசிய அன்னிய செலாவணி நிர்வாக பணியகம் 7ஆம் நாள் தகவல் வெளியிட்டது.
2024ஆம் ஆண்டு முழுவதும் சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு அளவு, 3இலட்சத்து 20ஆயிரம் கோடி அமெரிக்க டாலருக்கு மேலே இருந்தது என்றும், நாட்டின் பொருளாதார செயல்பாடு நிதானமாக உள்ளது,
உயர் தரமான வளர்ச்சி முன்னெடுக்கப்படுவது ஆகியவை, அன்னிய செலாவணி கையிருப்பு நிதானமாக உள்ளது என்பதற்கு உதவி அளிக்கின்றது என்றும் இப்பயணியகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.