ஆசியாவின் பில்லியனர் தலைநகராக முன்னேறியுள்ளது மும்பை: அறிக்கை

சமீபத்திய ஹுருன் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டின் உலகளாவிய பணக்காரர் பட்டியலின்படி, முதல் முறையாக அதிக எண்ணிக்கையிலான பில்லியனர்களுடன், ஆசிய தலைநகர் என்ற பட்டத்தை மும்பை பெற்றுள்ளது.
இது வரை இந்த இடத்தை பெற்றிருந்த பெய்ஜிங்கை முந்தியுள்ளது மும்பை நகரம்.
இது இந்தியாவிற்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
ஆசியாவிலேயே செல்வத்தை உருவாக்குவதில் மும்பையை முன்னணியில் உள்ளது.
இந்தியாவின் நிதி மையமான மும்பை, சமீபத்திய ஹுருன் பணக்காரர் பட்டியலின்படி, ஆசிய தரவரிசையில் பெய்ஜிங் (91) மற்றும் ஷாங்காய் (87) ஆகிய இரண்டையும் விஞ்சி, 92 பில்லியனர்களுடன் முன்னேறியுள்ளது.
119 பில்லியனர்களைக் கொண்ட நகரங்களுக்கான உலகளாவிய பணக்காரர்கள் பட்டியலில் நியூயார்க் முன்னணியில் உள்ளது.
அதற்கு அடுத்தபடியாக லண்டன் 97 பேருடன் உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author