2025ஆம் ஆண்டில், வானிலை பேரிடர் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புமுறையின் கட்டுமானத்தைச் சீனா வலுப்படுத்தும்.
முன்னெச்சரிக்கை அடிப்படையிலான அவசர தொடர்பு அமைப்புமுறையையும் சீனா மேம்படுத்தும். 2025ஆம் ஆண்டின் சீனத் தேசிய வானிலை பணிக் கூட்டம் ஜனவரி 8ஆம் நாள் இத்தகவலை வெளியிட்டது. கடந்த ஆண்டில், பொது மக்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் செய்வதற்காக வானிலை வாரியங்கள் இதர 33 வாரியங்களுடன் சேர்ந்து, மொத்தமாக 17 ஆயிரம் முன்னெச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
தற்போது, உலகளவில் வானிலை மாற்றம் மென்மேலும் சிக்கலாகி வருகிறது. தீவிரமான வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கையும் வலுவும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்று சீன வானிலை பணியகத்தின் தலைவர் சென் செங்லின் இக்கூட்டத்தில் எடுத்துக்கூறினார்.
2025ஆம் ஆண்டில், வானிலை வாரியங்கள் தொடர்புடைய சேவைகளை வலுப்படுத்தி, பல்வேறு பிரதேசங்களில் பேரிடர் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணி அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.