பூர்வாங்க புள்ளிவிவரங்களின்படி, இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 5.2விழுக்காடு அதிகமாகும்.
சீனப் பொருளாதாரத்தின் வலுவான நிலைப்புத் தன்மையை இது வெளிக்காட்டியுள்ளது. மேலும், உலக அளவில் முக்கிய நாடுகளின் வரிசையில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி முன்னணியில் இடம் வகித்துள்ளது. 2025ஆம் ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்பீடு 2024ஆம் ஆண்டின் 3.3விழுகாட்டிலிருந்து 3.2விழுக்காடாகக் குறையுமென கடந்த சில நாட்களுக்கு முன், சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் நிலைப்புத் தன்மை மட்டுமின்றி, சீனப் பொருளாதாரத்தின் முன்னேற்றப் போக்கும் முனைப்புடன் காணப்படுகிறது. இவ்வாண்டு முதல், சீனா புதிய உயர் தர உற்பத்தித் திறன் ஸ்தல நிலைமைக்கேற்ப வளர்ந்துள்ளது. முதல் மூன்று காலாண்டுகளில், உபகரணங்களின் தயாரிப்புத் தொழில் மற்றும் உயர் தொழில்நுட்ப தயாரிப்புத் தொழிலின் கூட்டு மதிப்பு அதிகரிப்பு விகிதம் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு மேல் வருமானமுடைய தொழில் நிறுவனங்களை விட, முறையே 3.5 மற்றும் 3.4விழுக்காடு அதிகரித்துள்ளன. 2025ஆம் ஆண்டு சீனாவின் புத்தாக்க குறியீடு உலகின் முதல் 10 இடங்களில் முதன்முறையாக இடம் பெறுகிறது.
அதுமட்டுமல்லாமல், சீனப் பொருளாதாரம் நெகிழ்ச்சித் தன்மையுடன் உள்ளது. இவ்வாண்டு முதல், வர்த்தக பாதுகாப்புவாதம், புவிசார் அரசியல் மோதல் முதலிய பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், முதல் மூன்று காலாண்டுகளில் சீன சரக்குகளின் ஏற்றுமதி இறக்குமதி மதிப்பு கடந்த ஆண்டை காட்டிலும், 4விழுக்காடு அதிகரித்துள்ளது. இது 8 காலாண்டுகளில் தொடர்ச்சியான அதிகரிப்பை நனவாக்கியுள்ளது.
உயர் தர வளர்ச்சியின் உறுதித் தன்மையுடன் சீனா உலகத்துக்கு புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது. சீனப் பொருளாதாரம் பரந்துபட்ட எதிர்காலத்தைக் கொண்டுள்ளதாகவும் சீனச் சந்தை தங்களது உறுதியான தேர்வாகும் எனவும் வெளிநாட்டு நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
