வங்கிக்களுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி , ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும். அந்த வகையில் இன்று வங்கிக்களுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதனால் ரெப்போ வட்டி விகிதம் 5.50 சதவீதத்தில் இருந்து 5.25 சதவீதமாக குறைந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி உள்ளிட்டவை காரணமாக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் வாகனக் கடனுக்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது
