“உலகின் தென் பகுதி”யில், புதிதாக வளர்ந்து வரும் நாடுகளும், வளர்ந்து வரும் நாடுகளும் இடம்பெறுகின்றன. “உலகின் தென் பகுதி”யில் பிரிக்ஸ் நாடுகள் முன்னணியில் இருக்கின்றன.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அக்டோபர் 24ஆம் நாள் “பிரிக்ஸ் பிளஸ்” எனும் தலைவர்களின் கூட்டத்தில் உரை நிகழ்த்திய போது, “அமைதி”, “வளர்ச்சி” மற்றும் “நாகரிகம்” ஆகியக் கருப்பொருட்களை ஆழமாக விவரித்தார். “உலகின் தென் பகுதிக்கு” சீனா எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருவதை இது மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
உலகில் மிக பெரிய வளர்ந்து வரும் நாடான சீனா, “உலகின் தென் பகுதி”யில் ஆக்கமுடன் செயல்படும் நாடாகும். “உலகின் தென் பகுதி”யின் நாடுகளின் கூட்டு வளர்ச்சிக்கு சீனா உதவி செய்து, மனித குலத்தின் பொது அறைகூவல்களைச் சமாளிப்பதற்கு புதிய திட்டத்தை வழங்கி, புதிய ஆற்றலைக் கொண்டு வந்துள்ளது.
“உலகின் தென் பகுதி”யின் நாடுகளின் பொருளாதார அளவு, உலகப் பொருளாதாரத்தின் மொத்த அளவில் வகிக்கும் பங்கு, 40 விழுக்காட்டுக்கு மேலாகும். பிரிக்ஸ் பெரிய குடும்பத்தின் பொருளாதார அளவு, உலகின் மொத்த பொருளாதார அளவில் 30 விழுக்காடு வகிக்கிறது. ”உலகின் தென் பகுதி”யின் பொருளாதார ஒத்துழைப்பை பிரிக்ஸ் நாடுகள் முன்னேற்றி வருகின்றன.
பொது செல்வமானது, ”உலகின் தென் பகுதி”யின் பொது இலக்காகும். நடப்பு கூட்டத்தில் பிரிக்ஸ் நாடுகள் உலகப் பொருளாதார மேலாண்மை அமைப்பு முறை சீர்திருத்தத்தில் ஆக்கமுடன் பங்கெடுத்து, இதற்கு வழிகாட்ட வேண்டும் என சீனா வேண்டுகோள் விடுத்து, வளர்ச்சியை சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக நிகழ்ச்சி நிரலின் மைய இடத்தில் வைப்பதை முன்னேற்றியுள்ளது. மறுமலர்ச்சியடையும் பாதையில் பல வளர்ந்து வரும் நாடுகளுடன் சீனா மேலும் ஒன்றுபட்டு முன்னேறும்
நவீனமயமாக்கம், பொது மக்களின் கூட்டு எதிர்பார்ப்பாகும். “உலகின் தென் பகுதி”யின் நாடுகள் நவீனமயமாக்கத்தை நோக்கி கூட்டாக முன்னேறுவது, உலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. நவீனமயமாக்கச் சாதனைகளை ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு மக்களுக்கும் நன்மை பயக்கச் செய்து, மனித குலத்தின் பொது எதிர்கால சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்றுவது, சீனா முயற்சி மேற்கொள்ளும் திசையாகும். இது, “உலகின் தென் பகுதி”யின் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பின் நோக்கமுமாகும்.