டெஸ்லாவின் ஷாங்காய் எரிசக்தி சேமிப்பு தொழிற்சாலை அண்மையில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதன் அதிகாரப்பூர்வ உற்பத்தி தொடங்கும் என்றும் ஆண்டுக்கு 10ஆயிரம் Megapack மின்கலன்களை உற்பத்தி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில், வெளிநாட்டு நிறுவனங்கள் சீன சந்தையில் முதலீடுகளை கணிசமாக அதிகரித்துள்ளன. ஷாங்காய்கில் மலேசியாவைச் சேர்ந்த பார்க்சன் குழுமம் தனது நிறுவனத்தைச் சீரமைத்தல் மற்றும் புதுப்பித்தல் பணியை மேற்கொண்டு வருகிறது. பெய்ஜிங்கில் பிரான்ஸின் மருந்து நிறுவனமான சனோஃபி புதிய உற்பத்தித் தளத்தை நிறுவுவதாக அறிவித்தது.
சீனாவின் புத்தாக்க நிறுவனங்களுடன் ஒத்துழைக்க எதிர்பார்க்கிறேன் என்று ஜெர்மனியின் போஷ் குழுமத்தைச் சேர்ந்த சீனக் கிளை நிறுவனத்தின் தலைவர் சூ டாகுவான் தெரிவித்தார். சீன நிறுவனங்களின் ஆய்வு முடிவுகளை எங்கள் உற்பத்திக்கு பயன்படுத்தவும் அல்லது சீன நிறுவனங்களுடன் ஆராய்ச்சி மேற்கொள்ளவும் விரும்புவதாக தெரிவித்தார்.
சந்தை அமைப்பு, சந்தை அளவு, தொழிற்துறை சங்கிலி, திறமைசாலிகள் ஆகியவற்றில் சீனா ஒட்டுமொத்த மேம்பாடுகளைக் கொண்டுள்ளது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
தற்போது, உலகப் பொருளாதார வளர்ச்சியின் மந்தநிலை மற்றும் அதிகரிக்கும் புவியமைவு அரசியல் அபாயங்கள் முதலிய காரணிகள், உலக முதலீட்டைத் தெளிவாகப் பாதிக்கின்றன. ஆனால், பல வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான உலக முதலீட்டு முன்னாய்வில் சீனச் சந்தையின் மீது நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.
சீனப் பொருளாதாரக் கட்டமைப்பு மேலும் மேம்பட்டு வர முடியும் என மோர்கன் ஸ்டான்லி எனும் அமெரிக்க சர்வதேச நிதி சேவைகள் நிறுவனத்தின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் சீனாவின் செயற்கை நுண்ணறிவு தொழில்துறை புதிதாக வளர்ந்து வரும் துறைகளின் மேம்பாடுகள் தொடர்ந்து விரிவடையும். சீனாவின் உள்நாட்டு தேவை தொடர்ந்து விரிவாகுவதுடன், வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவில் அதிக ஈவுத்தொகையைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.