கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் பொங்கல் பண்டிகை சிறப்பு சந்தை நடைபெறவுள்ளது.
இந்த சந்தையின் போது போது பாதுகாப்பு பணிக்காக 300 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று நள்ளிரவு முதல் 16ஆம் தேதி வரை சிறப்பு சந்தை நடத்தப்படவுள்ளது.
இந்த சந்தையில் விழுப்புரம், கடலூர், சேலம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இருந்து கரும்பு, மஞ்சள் மற்றும் இஞ்சி விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்த சந்தைக்காக வெளியூரில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி வைக்க 3 ஏக்கர் பரப்பில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என அங்காடி நிர்வாகம் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.