திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் பலி! பிரதமர் மோடி இரங்கல்!

Estimated read time 1 min read

ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான டோக்கன் இலவசமாக இன்று முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே, நேற்று இரவு முழுவதுமே பல பக்தர்கள் கூடிய நிலையில், கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சொர்க்கவாசல் தரிசனத்திற்கான இலவச டோக்கன் வழங்கப்பட்ட தகவலை அறிந்த மக்கள் அளவுக்கு அதிகமாக அந்த பகுதியில் இரவிலே திரண்டதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு, மூச்சுத்திணறியதால் 6 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் மூச்சுத்திணறி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

அவரது உடல் தற்போது திருப்பதி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் சிலருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை பற்றிய தெளிவான தகவல் இன்னும் வெளியாகவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மோடி இரங்கல்

திருப்பதி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் அதில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் திருப்பதியில் ஏற்பட்ட துயர சம்பவம் மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் முழுமையாக குணமடைய பிரார்த்திக்கிறேன். தேவையான உதவிகளை மாநில அரசு மற்றும் அதிகாரிகள் விரைவாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார் .

Please follow and like us:

You May Also Like

More From Author