பழம்பெரும் நடிகை புஷ்பலதா நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 87.
நடிகர் ஏ.வி.எம்.ராஜனின் மனைவியாகவும், பல ஹிட் திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்ற நடிகையாகவும் அறியப்பட்ட புஷ்பலதா, 1961-ம் ஆண்டு வெளியான “கொங்கு நாட்டு தங்கம்” படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அடுத்து, எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி என அன்றைய காலகட்டத்தின் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்தார்.
ஏ.வி.எம்.ராஜனுடன் இணைந்து “நானும் ஒரு பெண்”என்ற படத்தில் நடித்தபோது அவருடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டார்.
“சகலகலா வல்லவன்” மற்றும் “நான் அடிமை இல்லை” போன்ற படங்களில் நடித்திருந்தார்.
சென்னையில் வாழ்ந்த அவர், வயது மூப்பின் காரணமாக, நேற்று காலமானார். திரைத்துறையில் இருந்து அவரது மறைவுக்கு இரங்கல்கள் வெளியாகி வருகின்றன.