பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்திய பிரதமர் மோடி, அடுத்த மாதம் 11-ம் தேதி பிரான்ஸ் செல்கிறார். அங்கு நடைபெறும் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்கவுள்ள அவர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானையும் சந்திக்க உள்ளார்.
அப்போது, இருநாட்டு உறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்த உள்ளனர். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.