வரும் ஜூலை 22 ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது.
இதில் ஜூலை 23 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
ஆகஸ்ட் 12 வரை நீளும் இந்த கூட்டத்தொடரில் ஆறு புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு உத்தேசித்துள்ளதாக உள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
முக்கியமாக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வரும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புடன் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதே போல் தற்போது நடைமுறையில் உள்ள விமானச் சட்டத்தை மாற்றும் பாரதிய வாயுயான் விதேயக் 2024 மசோதாவும் தாக்கல் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.