31ஆவது கோடைக்கால உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை நாளிரவு சீனாவின் செங்து நகரில் துவங்கவுள்ளது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் துவக்க விழாவில் கலந்து கொண்டு போட்டியின் துவக்கத்தை அறிவிக்கவுள்ளார்.
அதை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும், அவரது மனைவி பொங் லீயுவானும், ஜுலை 28ஆம் நாள் மதியம் செங்து நகரில், இவ்விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் பங்கெடுத்த சர்வதேச விருந்தினர்களுக்கு வரவேற்பு விருந்து அளித்தனர்.
இந்தோனேசிய அரசுத் தலைவர் ஜோக்கோ, அவரது மனைவி எரியானா, மௌரிடானிய அரசுத் தலைவர் காஸ்வாணி, புரூண்டி அரசுத் தலைவர் ன்டாயிஷிமியே, கயானா அரசுத் தலைவர் முகமது இர்ஃபான் அலி, ஜார்ஜியா தலைமையமைச்சர் கலிபாஷ்விலி, சர்வதேசப் பல்கலைக்கழக விளையாட்டுக் கூட்டமைப்பின் தற்காலிகத் தலைவர் லெனோஸ் எடர் முதலியோர், இவ்வரவேற்பு விருந்தில் கலந்து கொண்டனர்.
சீன அரசு மற்றும் சீன மக்களின் சார்பாக, சர்வதேச விருந்தினர்களுக்கு, ஷிச்சின்பிங் வரவேற்பு தெரிவித்தார். அவர் உரைநிகழ்த்துகையில், இவ்விளையாட்டுப் போட்டியின் குறிக்கோளைப் பின்பற்றி, ஒற்றுமையுடன் உலகளாவிய சவால்களைச் சமாளித்து, சர்வதேச சமூகத்தில் நேர்மறை சக்தியைத் திரட்டி, ஒத்துழைப்புடன் அருமையான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். செங்து நகர், வரலாறு மற்றும் பண்பாட்டுச் செல்வமிக்க நகராகும். அது, சீனாவில் அதிக உயிராற்றல் மற்றும் மகிழ்ச்சி தரும் நகரங்களில் ஒன்று. செங்து சாலைகளில் உலா சென்று, சீனாவின் நவீனமயமாக்கத்தை அனுபவித்துப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டார்.
உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி இன்று இரவு துவக்கம்
