அயோத்தி ராமர் கோவிலில் 600 கிலோ எடை கொண்ட கல்வெட்டுடன் கூடிய உலோக மணி நிறுவப்படவுள்ளது.
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழா அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கோவில் வளாகத்தில் வைக்க உலகம் முழுவதும் இருந்து பல பரிசுகள் குவிந்து வருகின்றன.
அண்மையில் அமெரிக்க வைரங்களைப் பயன்படுத்தி செய்யப்பட்ட நெக்லஸ் புகைப்படம் வைரலாகி அனைவரின் கவனத்தை ஈர்த்தது. 40 கலைஞர்களால் நெக்லஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. நெக்லஸ் தயாரிக்க இரண்டு கிலோ வெள்ளி மற்றும் 5,000 அமெரிக்க வைரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் செய்த நெக்லஸ் கோயிலுக்கு பரிசாக வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், கோவில் வளாகத்தை அலங்கரிக்கும் பல பொருட்களில் 600 கிலோ உலோக மணியும் உள்ளது.600 கிலோ எடையுள்ள ‘ஜெய் ஸ்ரீராம்’ கல்வெட்டுடன் கூடிய உலோக மணி கோவில் வளாகத்தில் நிறுவப்படவுள்ளது. அதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.